முத்திரை பதித்த முத்தமிழ்ச் சங்கம்..!! அற்புதமாய் அமைந்த அறிவு மேடை..!!
முத்திரை பதித்த முத்தமிழ்ச் சங்கம்..!!
அற்புதமாய் அமைந்த அறிவு மேடை..!!
=============================
இறையருளால் நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஜித்தா முத்தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், “அறிவு மேடை” எனும் சகோதரத்துவ சங்கம நிகழ்ச்சி,
ஜித்தா மாநகரில் சங்கத்தின் அமைப்பாளர் திரு அபூபக்கர் அவர்கள் தலைமையில், சக நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சவுதி அரேபியா, இந்திய தேசிய கீதங்கள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, பின்னர் இறைவேத வசனங்களோடு இனிதே தொடங்கியது.
ஜித்தா முத்தமிழ் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் திரு அபூபக்கர் அனைவரையும் வரவேற்றதோடு, அறிவுமேடை நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரை ஆற்றினார்.
சவுதி மேற்கு மண்டலம்
திமுக அயலக அணி, அமைப்பாளர் திரு.எழில்மாறன், இன்டியன் வெல்ஃபர் ஃபோரம் தலைவர் கீழை முஹம்மது இர்ஃபான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ST கொரியர் நிறுவனத்தின் தலைவர் திரு.அன்சாரி, கின்னஸ் உலக சாதனை நாயகன் திரு. பத்ருத்தீன் அப்துல் மஜீத், அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மூத்த நிர்வாகி திரு.அபூகான், மூத்த பத்திரிக்கையாளர் தமிழ் கேள்வி திரு.செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்து கொண்டு “சமத்துவம் காப்போம்..!! சமதர்மம் மீட்போம்..!!” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.
அந்நிகழ்வின் மகிழ்வில் நான் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் “காலச்சுவடுகள் 1.0” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை சிறப்பு அழைப்பாளர்கள், ஜித்தா முத்தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் இலங்கை திரு.தங்கசாமி அவர்கள் எமது காலச்சுவடுகள் 1.0 புத்தகத்திற்கு ஆழமான அணிந்துரையை வழங்கினார்.
திரு.செந்தில்வேல் அவர்கள் எழுதி வெளியிட்ட திராவிடம் 2.0 என்ற புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் அணிந்துறையை திரு.ஜாகிர் ஹுசைன் அவர்கள் வழங்கினார்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் நண்பர்கள், உறவுகள், சமூகநீதி சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இறுதியில் பல்வேறு துறையில் சேவையாற்றிய சாதனையாளர்கள், அனுசரணை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜாகிர் உசேன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஜனாப் அபூபக்கர், ஜனாப் ஜாஹிர் ஹூஸைன், ஜனாப் அப்துல் சஜ்ஜாது, ஜனாப் ராபிக்,
ஜனாப் தஞ்சை அபு உள்ளிட்ட சங்கத்தின் சக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
@highlight
Ahamed Sahib
Thol.Thirumavalavan
M. K. Stalin Jawahirullah MH
DMK ITWing Subash Dsr Tuj
Sun News Tamil Kalaignar TV
Dr. MH. Jawahirullah
#vckitwing #VCK_SOCIAL_MEDIA #VCK
Click Here to view PDF PDF



