கலவரம் தடுப்போம் கருத்தியல் படைப்போம்..!! கல்லறை அரசியல் அடியோடு தவிர்ப்போம்..!!
இறைவனைப் புகழ்ந்து, எளியோருக்கு உணவளித்து, சமய நல்லிணக்கம் பேணி, சகோதரத்துவம் நிலைத்திட, சமூக ஒற்றுமை தழைத்தோங்க சூளுரைக்கும் ரம்ஜான் என்னும் ஈகைப் பெருநாள் வந்து விட்டது. ஒரு மாத காலம் நோன்பிருந்து உலக அமைதிக்காக பிராத்தித்த அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். உலக அளவில் சாந்தியும், சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இருப்பினும் மனிதப் படுகொலைகளும், குண்டு வீச்சுகளும் முடிந்த பாடில்லை. மனித உயிர்களின் மதிப்பு மலிவாகி விட்டது. சல்லடையாகி விட்ட பாலஸ்தீனம் […]